​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.4881 கோடி இழப்பு

Published : May 13, 2019 9:32 PM

வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.4881 கோடி இழப்பு

May 13, 2019 9:32 PM

4வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 4881 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலே அதிக சந்தாதாரர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில், 11 ஆயிரத்து 775 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கு முந்தைய காலாண்டில் விற்பனை 11 ஆயிரத்து 764 கோடி ரூபாயாக இருந்தது. ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்களை காட்டிலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.

ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை நீக்குவதற்காக குறைந்தபட்சம் மாதம் 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற புதிய திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியன் விளைவாக கடந்த 5 மாதங்களில் 8 கோடியே 80 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிறுவனத்திற்கு தற்போது 31 கோடியே 41 லட்சம் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர்.