​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமணத்துக்கு ஏங்கிய வாலிபருக்கு மணமகள் இல்லாமல் திருமணம்

Published : May 13, 2019 9:20 PM

திருமணத்துக்கு ஏங்கிய வாலிபருக்கு மணமகள் இல்லாமல் திருமணம்

May 13, 2019 9:20 PM

குஜராத் மாநிலத்தில் நெடுநாட்களாக திருமணத்துக்கு ஏங்கிய வாலிபருக்கு மணமகள் இல்லாமல் திருமணம் நடத்தப்பட்டது.

அந்த மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டம், ஹிம்மத்நகர் பகுதியை சேர்ந்த விஷ்ணு பரோட்டின் மகன் அஜய் பரோட். பிறவியிலேயே கற்றல் குறைபாட்டுடன் வளர்ந்த அஜய், சிறுவயதில் இருந்தே திருமண விழாக்களில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தார்.

27 வயதாகும் அஜய் அதற்கேற்ற உடல் மற்றும் அறிவு வளர்ச்சி இல்லாதிருப்பதால் அவருக்கேற்ற மாதிரி மணமகளை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் அவரது திருமண ஏக்கத்தை தணிக்க எண்ணிய தந்தை, நாள் குறித்து, அழைப்பிதழ் அனுப்பி ஏற்பாடுகள் செய்தார்.

‘மெஹந்தி’, ‘நலங்கு’ என மணமகன் வீடு களைகட்டியது. மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க குதிரை மீது அஜய் தலைப்பாகையுடன் மணக்கோலத்தில் பட்டாடையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மணமகளே இல்லாமல் திருமணம், விருந்து என அமர்களப்படுத்தி மகனின் ஏக்கத்தை தணித்துள்ளார் விஷ்ணு பரோட்.