​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ விபத்து...

Published : May 13, 2019 5:00 PM

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ விபத்து...

May 13, 2019 5:00 PM

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே மைதானத்தில் உள்ள புதர்களில் தீப்பற்றியதையடுத்து,  தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. இந்த மைதானம் புதர் மண்டி அதிகளவிலான குப்பைகளுடன் காட்சியளிக்கும் நிலையில், திடீரென அவற்றில் தீ பிடித்தது.

காற்றின் வேகம் காரணமாக விரைந்து பரவிய தீ, சிறிது நேரத்தில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. தீ விபத்து காரணமாக எழுந்த புகை மூட்டம் விண்ணை முட்டும் அளவிற்கு பல அடி உயரத்திற்கு எழுந்தது.

தகவலின்பேரில் நிகழ்விடம் சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.