​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்சியர் அலுவலகத்தில் லாரி ஓட்டுநர் குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சி

Published : May 13, 2019 2:52 PM

ஆட்சியர் அலுவலகத்தில் லாரி ஓட்டுநர் குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சி

May 13, 2019 2:52 PM

கூடுதல் வட்டி கேட்டு, வீட்டை விட்டு வெளியேற்றிய சகோதரரிடம் இருந்து, வீட்டை மீட்டு தரக்கோரி, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில், லாரி ஓட்டுநர் குடும்பத்துடன் தீ குளிக்க முயன்றார்.

நவாப்பாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான திருப்பதி என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் பாஸ்கரன் என்பவரிடம், வீட்டை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதை ஒரு வருடத்தில் வட்டியுடன் சேர்ந்து 4 லட்சம் ரூபாயாக திரும்ப கொடுத்துள்ளார்.

ஆனால் பத்து லட்சம் ரூபாய் வட்டி பாக்கி தர வேண்டி உள்ளது என தகராறு செய்து வந்த பாஸ்கரன், 2 நாட்களுக்கு முன்பு, திருப்பதி குடும்பத்தினரை வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி சென்றுள்ளார்.

இதனால் அவரிடம் இருந்து வீட்டை மீட்டு தரக்கோரி, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் தீ குளிக்க முயன்ற திருப்பதி தடுத்து நிறுத்தப்பட்டார். அதிகாரி ஒருவரின் காலில் விழுந்து அவர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து சகோதரர் பாஸ்கரனிடம் இருந்து வீட்டு சாவியை பெற்று, திருப்பதி குடும்பத்தினரிடம் அதிகாரிகள் வழங்கினர்.