​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்று விளையாடிய ரஷ்ய அதிபர் புடின்

Published : May 13, 2019 1:17 PM

ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்று விளையாடிய ரஷ்ய அதிபர் புடின்

May 13, 2019 1:17 PM

ஐஸ் ஹாக்கி போட்டியின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறாது.

ஸ்கேட்டிங் காலணிகளை அணிந்துகொண்டு விளையாடும் ஐஸ் ஹாக்கி போட்டிகளில் புடின் அவ்வப்போது பங்கேற்பது வழக்கம் இந்நிலையில் சோச்சி நகரில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கிப் போட்டியில் புடினின் லெஜன்ட்ஸ் அணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷொய்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எதிரணியில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் புடின் பங்கேற்ற அணி 14க்கு 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின் புடின் தடுமாறி மைதானத்தில் விழுந்தார்

அவர் எழுந்திருக்க சக வீரர்கள் இருவர் உதவி செய்தனர். இதைத் தொடர்ந்து புடின் சிரித்தபடியே ரசிகர்களுக்கு கையசைத்து விட்டுச் சென்றார்.