​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலார்ட்டுக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்

Published : May 13, 2019 11:31 AM

போலார்ட்டுக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்

May 13, 2019 11:31 AM

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது பவுளருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கிரீசை விட்டு நகர்ந்த மும்பை அணி வீரர் போலார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்த போது, போலார்ட் எதிர்கொண்ட கடைசி ஓவரை சென்னையின் பிராவோ வீசினார்.

அப்போது பிரவோ தொடர்ந்து 2 முறை பந்துகளை அகலமாக வீசினார். போலார்ட் கிரீசில் சரியாக நிற்காத நிலையில் இரண்டு முறையும் அகலப்பந்துக்கான ரன்கள் வழங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த போலால்ட் 3வது பந்தை பிராவோ வீச வந்த போது கிரீசைவிட்டு விலகி சென்றார். இதனையடுத்து களநடுவர்கள் அவரிடம் சென்று எச்சரித்தனர்.

போலார்ட் தனது செயலின் மூலம் ஐபிஎல் விதிமுறைகளை மீறியதையடுத்து அவருக்கு ஒரு போட்டிக்கான சம்பளத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.