​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாள்தோறும் வீணாகும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர்

Published : May 13, 2019 10:19 AM

நாள்தோறும் வீணாகும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர்

May 13, 2019 10:19 AM

வேலூர் மாவட்டம் ஆற்காடு பாலாற்றில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.

ஆரணி நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு 36 கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. முப்பதுவெட்டி, அத்தித்தாங்கல் வழியாக நாள்தோறும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது.

5 மாதங்களுக்கு முன் அத்தித்தாங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றபோது இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. ஆரணி நகராட்சி அதிகாரிகள் வந்து அரைகுறையாக உடைப்பை சரிசெய்து சென்றதாகக் கூறப்படும் நிலையில், அதிலிருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி வருகிறது.

உடனடியாக இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.