​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட் பந்தை சேதப்படுத்தியதாக புகார்

Published : May 13, 2019 6:23 AM

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட் பந்தை சேதப்படுத்தியதாக புகார்

May 13, 2019 6:23 AM

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் பிளங்கட் பந்தைச் சேதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் இரு அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி சவுத் ஹாம்டனில் நடந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கட், பந்தை தனது சுரண்டி சேதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கேற்றார்போல் அவர் தனது நகத்தால் பந்தை சுரண்டுவதுபோல வீடியோவும் வெளியாகி உள்ளது.

பிளங்கெட் தவறு செய்ததாக நடுவர்களிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இதுகுறித்து எழுந்துள்ள சர்ச்சை தேவையற்றது என்று தெரிவித்துள்ளது.