​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் மனைவியிடம் செயின் பறிப்பு முயற்சி

Published : May 11, 2019 4:53 PM

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் மனைவியிடம் செயின் பறிப்பு முயற்சி

May 11, 2019 4:53 PM

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனைவியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டருகே ஆர்.எஸ். பாரதியின் மனைவி சம்பூரணம் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். சுதாரித்துக்கொண்டு சம்பூரணம் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடினர்.

இதனையடுத்து நகைப் பறிப்பு முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் இருவரும் வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.