​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆறு, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வலியுறுத்தல்

Published : May 11, 2019 4:49 PM

ஆறு, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வலியுறுத்தல்

May 11, 2019 4:49 PM

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் உள்ள ஆறு, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று கும்பகோணம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படவேண்டும் என்பது மரபாக உள்ளது. ஆனால் போதிய மழை இல்லாதது, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல ஆண்டுகளாக அது முடியாமலே போயுள்ளது.

இந்நிலையில் ஜுன் 12ம் தேதிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அன்றைய தினம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதன் காரணமாக காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் உள்ள ஆறு, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று கும்பகோணம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.