​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இறுதி போட்டியில் ’தந்தைகளின் ராணுவம்’..! தோனி மகிழ்ச்சி

Published : May 11, 2019 4:43 PM

இறுதி போட்டியில் ’தந்தைகளின் ராணுவம்’..! தோனி மகிழ்ச்சி

May 11, 2019 4:43 PM

ஐபிஎல்லில் எட்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த மகிழ்ச்சியை அணி வீரர்களுடன் சி.எஸ்.கே. கேப்டன் மகேந்திரசிங் தோனி பகிர்ந்து கொண்டார்.

சென்னை அணியில் இருக்கும் வீரர்கள் பெரும்பாலானோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அந்த அணியை, "தந்தைகளின் ராணுவம்" என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பர். அதேபோல் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் உள்ள டெல்லி அணிக்கு குழந்தைகளின் ராணுவம் என்ற செல்லப்பெயர் உண்டு. அந்த அணியை வீழ்த்தி தற்போது சென்னை அணி எட்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள கேப்டன் தோனியும் தனது மகிழ்ச்சியை சக வீரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார்.