​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் எஞ்சின் பகுதியில் திடீரென பிடித்த தீ

Published : May 11, 2019 4:42 PM

ரயில் எஞ்சின் பகுதியில் திடீரென பிடித்த தீ

May 11, 2019 4:42 PM

ஒடிசாவில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரயில் எஞ்சின் முற்றிலும் எரிந்து சேதமானது.

டெல்லியில் இருந்து ஒடிசாவின் புவனேஸ்வருக்கு சென்ற பயணிகள் எக்ஸ்பிரஸ், கந்தபடா ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயில் எஞ்சின் பகுதியில் திடீரென தீ பிடித்தது. இதையறிந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். உடனடியாக பயணிகள் இருந்த ரயில் பெட்டிகள் எஞ்சினில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டன.

பயணிகள் பத்திரமாக ரயிலில் இருந்து இறக்கப்பட்டனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் யாருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.