​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர், மின்சார வசதி இல்லாமல் அவதிப்படும் மக்கள்

Published : May 11, 2019 2:29 PM

குடிநீர், மின்சார வசதி இல்லாமல் அவதிப்படும் மக்கள்

May 11, 2019 2:29 PM

ஒடிசாவில் பானி புயல் தாக்கி ஒரு வாரத்துக்கு மேலாகியும் பல இடங்களில் மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

ஒடிசாவில் கடந்த 3ஆம் தேதியன்று பானி புயல் தாக்கியது. பூரி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான வீடுகள், மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.

புயல் தாக்கி 8 நாட்களாகியும் பல்வேறு இடங்களில் இன்னும் நிலைமை சீராகவில்லை. தலைநகர் புவனேஸ்வரில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. தற்போது வெயில் கொளுத்தி வரும் நிலையில், மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், மின்சாரம் வழங்கக்கோரி, சாக் என்ற இடத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்குள்ள மின்விநியோக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.