​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
35 வயது மதிக்கத்தக்க பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

Published : May 11, 2019 11:20 AM

35 வயது மதிக்கத்தக்க பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

May 11, 2019 11:20 AM

மானாமதுரை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வாகுடி விலக்கு பகுதியில் காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் தீயில் எரிந்துகொண்டிருப்பதை கண்டறிந்துள்ளார்.

உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், இறுதியாக கால் பகுதி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து, மானாமதுரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் பெண்ணின் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த பெண்மணி யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.