​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மகாவீரர் சிலை

Published : May 10, 2019 5:23 PM

1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மகாவீரர் சிலை

May 10, 2019 5:23 PM

செங்கத்தில் புத்தர் சிலையாக கருதப்பட்டு வந்த, 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பல ஆண்டுகளாக புத்தர் சிலை ஒன்று இருந்து வருகிறது. இந்த சிலையை சிறுபான்மை நலவாரிய உறுப்பினர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அது புத்தர் சிலை அல்லவென்றும், மகாவீரர் சிலை என்றும் கண்டறிந்தனர்.

மேலும் சிலையின் செவிப்பகுதி வடிவமைப்பை கொண்டு, அது 1,500 ஆண்டுகள் பழைமையானது என்றும் கூறினர். இந்த சிலையை புனரமைப்பு செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ஆய்வுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.