​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் சங்க நிலம் விற்பனை விவகாரம்...

Published : May 10, 2019 3:26 PM

நடிகர் சங்க நிலம் விற்பனை விவகாரம்...

May 10, 2019 3:26 PM

நடிகர் சங்க நிலம் விற்பனை விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் முன் நடிகர் விஷால் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை.

சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை, முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட 4 பேர் முறைகேடாக விற்பனை செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், நடிகர் விஷால் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்து, மூன்று மாதங்களில், இறுதி அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை இன்று நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய விஷாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை.

படப்பிடிப்பு இருப்பதால் வேறொரு நாளில் ஆஜராவதாக விஷால் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

விஷால் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின் தான் விசாரணையை தொடர முடியும் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.