​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் தற்காலிக குழு தலையிடாது - தமிழக அரசு

Published : May 10, 2019 2:04 PM

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் தற்காலிக குழு தலையிடாது - தமிழக அரசு

May 10, 2019 2:04 PM

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக  நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரி, தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் தெடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனிடையே தனி அதிகாரி சேகர், சங்க பணிகளை கவனிக்க தனக்கு உதவியாக, இயக்குனர் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய அட்காக் குழுவை நியமித்துள்ளார். இந்த தற்காலிக குழு நியமனத்துக்கு தடை கோரி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனி அதிகாரியின் உதவிக்காகவே தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு சங்க நிர்வாகத்தில் தலையிடாது எனவும் தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, தற்காலிக குழு நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டார். வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.