​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடைசி நேரத்தில் அயோக்யா படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

Published : May 10, 2019 12:46 PM

கடைசி நேரத்தில் அயோக்யா படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

May 10, 2019 12:46 PM

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள அயோக்யா திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில், அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கன்னா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் அயோக்யா. மது தாகூர் என்பவர் தாயரித்துள்ள இந்த திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மது தாகூர் இதற்கு முன்னர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார்.

இதில் ஏற்பட்ட நஷ்டத்தில் விநியோகஸ்தர்களுக்கு 3 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டியது நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது-அதனை கொடுக்கும் வரை அயோக்யா திரைப்படத்தை வெளியிடகூடாது என்று தென்னிந்திய பிலிம் சேம்பர் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அயோக்யா படம் இன்று வெளியாகவில்லை.