​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரஸ் கட்சியில் இணைய த.மா.காவினருக்கு அழைப்பு

Published : May 10, 2019 12:39 PM

காங்கிரஸ் கட்சியில் இணைய த.மா.காவினருக்கு அழைப்பு

May 10, 2019 12:39 PM

காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜக - அதிமுக வுடன் கூட்டணி அமைத்ததையே, அக்கட்சியினர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நரசிம்மராவ் தலைமையில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சி அதிமுகவோடு கூட்டணி அமைப்பதை எதிர்த்து தொடங்கப்பட்டது த.மா.கா. எனவும் கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரஸில் வாழ்க்கையை தொடங்கிய த.மா.கா.வினர், பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம் எனவும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

பாஜகவுடன் இணையும் முடிவை த.மா.கா. தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், த.மா.கா.வினர் மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி த.மா.கா.வினரின் தாய் வீடு என்றும் அவர்களை அரவணைக்கவும், ஆதரிக்கவும் காங்கிரஸ் தலைமை தயாராக இருப்பதாகவும், கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.