​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆறாம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது...

Published : May 10, 2019 6:41 AM

ஆறாம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது...

May 10, 2019 6:41 AM

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் 59 தொகுதிகளுக்கான ஆறாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் , டெல்லி, ஹரியானா ஆகிய ஏழு மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் 968 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், திக்விஜய் சிங், ஜோதிர்ராதித்யா சிந்தியா, ஷீலா தீட்சித், மனோஜ் திவாரி, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், உள்ளிட்டோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஆறாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஆதரவைத் திரட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலையுடன் ஆறாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது. இறுதிக்கட்டமாக மேலும் 59 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.