​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜீவ் காந்தி மீதான புகார் - காங்கிரஸ் மறுப்பு

Published : May 10, 2019 6:34 AM

ராஜீவ் காந்தி மீதான புகார் - காங்கிரஸ் மறுப்பு

May 10, 2019 6:34 AM

1984ம் ஆண்டு சீக்கியர்களைக் கொல்வதற்கான உத்தரவு நேரடியாக, ராஜீவ் காந்தியிடமிருந்து வந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்திய போர்க்கப்பலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குடும்ப சுற்றுலாவுக்காகப் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி அதிரடி விமர்சனத்தை முன்வைத்ததையடுத்து பாதுகாப்பு படையினரை ஏவல்களாக நடத்தியதாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் பல்வேறு தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பிரதமர் என்ற முறையில் ராஜீவ் காந்தி விராட் கப்பலில் இரண்டு நாட்கள் மட்டும் பயணித்ததாகவும் அப்போது அந்த கப்பலில் நடிகர் அமிதாப்பச்சன், சோனியா காந்தி உள்ளிட்ட ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர், வெளிநாட்டவர் பயணித்ததாக கூறப்படுவதற்கும் முன்னாள் கடற்படையின் கமாண்டர் அட்மிரல் வினோத் பஸ்ரிச்சா மறுப்பு தெரிவித்துள்ளர்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி மீது பாஜக மற்றொரு குண்டை தூக்கிப் போட்டுள்ளது. இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்கால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

இதற்கான உத்தரவை நேரடியாக ராஜீவ் காந்தியே கூறியதாக பாஜக தமது டிவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளது. 1984ம் ஆண்டு சீக்கியருக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் தனது விசாரணை அறிக்கையில் இதை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.

ஆனால் நானவதி கமிஷன் அறிக்கையில் ராஜீவ் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது பிரதமர் மோடி சரமாரியான தாக்குதல்களை தமது தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் தொடுத்து வருவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டுக்காக உயிரைத் துறந்த ராஜீவ் காந்தியை பழிப்பது சரியல்ல என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பாஜக தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ராஜீவ் கொலைக்கு பாஜக மீது பழியைப் போடுவதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது மத்தியில் சந்திரசேகர் பிரதமராகவும் தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இப்போது திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருப்பதாகவும் இந்த வரலாற்று அறிவு கூட அகமது பட்டேலுக்கு இல்லை என்று ஆர்.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.