​​ குரூப் 4 தேர்வுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரூப் 4 தேர்வுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்

குரூப் 4 தேர்வுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்

Feb 09, 2018 7:16 PM

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்காக தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 169 மையங்களில் 66 ஆயிரத்து 357 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.

இந்த தேர்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்திலிருந்து அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் வட்டாட்சியர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.