​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை..!

Published : May 09, 2019 8:01 PM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை..!

May 09, 2019 8:01 PM

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மதுரையில் தெப்பக்குளம், ஐயரவதநல்லூர், முனிசாலை, கீழ்மதுரை , மேலஅனுப்பானடி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெப்பம் சற்று தணிந்து, குளிர்ந்த காலநிலை நிலவியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், அண்ணாமடுவு, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சாம்பல்பட்டி, சிங்காரபேட்டை, காரப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக  பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, மதிகோண்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் க கஒரு மணி நேரத்திற்கு மேலானமழை பெய்தது. இந்த மழையால் நகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.