​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராசிபுரம் பச்சிளம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் அமுதவல்லி சிறையில் அடைப்பு

Published : May 09, 2019 7:36 PM

ராசிபுரம் பச்சிளம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் அமுதவல்லி சிறையில் அடைப்பு

May 09, 2019 7:36 PM

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான அமுதவல்லி, சிபிசிஐடி போலீசாரின் 2 நாள் விசாரணைக்கு பிறகு, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நாமக்கல் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற அரசு செவிலியர் அமுதவல்லி, ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் முக்கிய நபரான அமுதவல்லியை 2 நாட்களும், முருகேசன் மற்றும் அருள்சாமியை 3 நாட்களுக்கும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நாமக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன் படி சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்றும் இன்றும் மூன்று பேரிடமும் தனிதனியாக விசாரணை நடத்தப்பட்டது. அமுதவல்லிக்கு 2 நாள் காவல் முடிந்ததால் நாமக்கல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

வருகின்ற 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சேலம் சிறையில் அமுதவல்லி அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே இடைத்தரகர்களான பர்வீன், நிஷா ஆகியோரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.