​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது - தங்க தமிழ்ச்செல்வன்

Published : May 09, 2019 1:07 PM

தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது - தங்க தமிழ்ச்செல்வன்

May 09, 2019 1:07 PM

தேனி தொகுதியில் குளறுபடிகள் ஏதுமின்றி தேர்தல் நடந்த நிலையில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தேவையற்றது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைத்து வருவதாகவும், அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

திமுகவில் தான் இணையப்போவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை எனக் கூறிய அவர், என்றுமே திமுக தங்களுக்கு எதிரி என்றும், எடப்பாடி பழனிச்சாமி தங்கள் துரோகி எனவும் கூறினார். மேலும் தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது எனக் கூறிய அவர், இதற்காக லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.