​​ திருச்சியில் புகைப்படம் எடுத்த செய்தியாளர் மீது ஹெச்.ராஜா சகோதரர் தாக்குதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் புகைப்படம் எடுத்த செய்தியாளர் மீது ஹெச்.ராஜா சகோதரர் தாக்குதல்

திருச்சியில் புகைப்படம் எடுத்த செய்தியாளர் மீது ஹெச்.ராஜா சகோதரர் தாக்குதல்

Feb 09, 2018 5:07 PM

திருச்சியில் வழக்கு ஒன்றிற்கு ஆஜராகச் சென்ற பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர் சுந்தர், தன்னை படம்பிடித்த புகைப்படக்காரரை ஆத்திரத்துடன் தாக்கியுள்ளார்.

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது, போக்குவரத்து கழகங்களின் வருவாயான 32 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் சகோதரர், அரசுபோக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலத்தின் தலைமை கணக்கு அதிகாரியுமான சுந்தர் உள்ளிட்ட 21 பேருக்கு தொடர்பிருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கின் விசாரணைக்காக சுந்தர் உள்ளிட்ட 21 பேர் நேரில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சுந்தரை செய்தியாளர்களை படம் பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், செய்தியாளர் ஒருவரை ஆவேசமாக தாக்கிவிட்டுச் சென்றார். தாக்கப்பட்ட செய்தியாளர் சுந்தரை பிடித்து நிறுத்த முயன்ற போது, அவர் அங்கிருந்து வேகமாக வேகமாக வெளியேறினார்.