​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துரோகிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் -முதலமைச்சர்

Published : May 07, 2019 7:38 PM

துரோகிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் -முதலமைச்சர்

May 07, 2019 7:38 PM

ட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற காரணமான துரோகிகளுக்கும், அவர்களுடன் மறைமுகமாக கை கோர்த்துள்ள விரோதிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இடைத் தேர்தலில் திறமையான வேட்பாளர்களை அதிமுக நிறுத்தி உள்ளது என்றார். ஆனால் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அவர் புகார் கூறினார்.

ஒரு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 15,000 பேர் பணியாற்ற வேண்டுமென முதலமைச்சர் கூறினார்.

அப்படி தொண்டர்களின் உழைப்பால் எம்.எல்.ஏ. ஆன சிலர், சுயநலத்திற்காக அதிமுகவை எதிர்த்ததே இடைத் தேர்தல் வரக் காரணமென அவர் குறிப்பிட்டார். கட்சிக்கு துரோகம் இழைத்தோருக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

அதிமுக ஆட்சியில் செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், இதே போல செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க முடியாத திமுகவினர், குறைகளை மட்டுமே சொல்கிறார்கள் என்றார்.

திமுக கார்ப்பரேட் நிறுவனம் போல மாறி விட்டதாக முதலமைச்சர் குற்றம் சாட்டினார். ஆனால் அதிமுக ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதை லட்சியமாகவே கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.