​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக். சிறுமிகளை குறிவைத்து கடத்திச் செல்லும் சீன பாலியல் புரோக்கர்கள்

Published : May 07, 2019 7:04 PM

பாக். சிறுமிகளை குறிவைத்து கடத்திச் செல்லும் சீன பாலியல் புரோக்கர்கள்

May 07, 2019 7:04 PM

பாகிஸ்தானில் வசிக்கும், அப்பாவி ஏழை கிறிஸ்தவ சிறுமிகள், திருமணம் என்ற போர்வையில் சீனாவிற்கு கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்படுவதாக, அதிர்ச்சி புகார் எழுந்திருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்களில், பெரும்பாலானவர்கள் ஏழைகள். இவர்களை குறிவைத்து, பாகிஸ்தானில் உள்ள புரோக்கர்களின் உதவியோடு, வருகை புரியும் சீன புரோக்கர்கள், நைச்சியமாக பேசி ஏமாற்றுகின்றனர்.

ஏழை கிறிஸ்தவ சிறுமிகளை குறிவைக்கும் இந்த புரோக்கர்கள், சீன இளைஞர் மதம் மாறி, திருமணம் செய்ய தயாராக இருக்கிறார் எனக்கூறி, பணத்தை கொடுத்து ஏமாற்றுகின்றனர்.

பின்னர், 16, 17, 18 வயதுள்ள சிறுமிகளை மணந்து, அவர்களை சீனாவிற்கு அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் தள்ளி வாழ்க்கையை சீரழிக்கின்றனர்.

எளிதில் நகரப்பகுதிகளை அணுக முடியாத, கிராமங்களில் சிறுமிகளை தங்கவைத்து, அடைத்து கொடுமைப்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமையும் அரங்கேற்றப்படுகிறது.

இந்த பேரவலத்தில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்த சிறுமி ஒருவர், பாகிஸ்தான் திரும்பிய நிலையில், மேற்கண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.