​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க. ஒத்துழைத்தால் அ.தி.மு.கவை வீட்டுக்கு அனுப்பலாம் - தங்க தமிழ்ச்செல்வன்

Published : May 07, 2019 2:30 PM



தி.மு.க. ஒத்துழைத்தால் அ.தி.மு.கவை வீட்டுக்கு அனுப்பலாம் - தங்க தமிழ்ச்செல்வன்

May 07, 2019 2:30 PM

தி.மு.கவும், அ.ம.மு.கவும் இணைந்து செயல்பட்டால்தான் அ.தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 22 தொகுதிகளிலும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். அவ்வாறு வெற்றி பெற்றபின் தி.மு.க.வும் - அ.ம.மு.க.வும் இணைந்து செயல்பட்டால்தான் அ.தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்ற அவர், தி.மு.க. தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்தால் தங்களைப் பார்த்து பயப்படுவதாக அர்த்தம் என்று தெரிவித்தார்.

தி.மு.கவின் பி டீம் அ.ம.மு.க என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு பதிலளித்த அவர், அவ்வாறு இருந்தால் தாங்கள் ஏன் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.