​​ மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை தொடர்ந்து பெற்று வரும் அரசுப் பள்ளி – வியக்கும் தனியார் பள்ளிகள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை தொடர்ந்து பெற்று வரும் அரசுப் பள்ளி – வியக்கும் தனியார் பள்ளிகள்

மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை தொடர்ந்து பெற்று வரும் அரசுப் பள்ளி – வியக்கும் தனியார் பள்ளிகள்

Feb 09, 2018 11:11 AM

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மிகச்சிறிய கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளி, பயிற்றுவித்தலிலும், உள்கட்டமைப்பிலும், தொடர் விருதுகளிலும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

காளாச்சேரி கிராமத்தில் இயங்கி வரும் இந்த அரசு நடுநிலைப் பள்ளி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் ஒன்றாக சராசரி பள்ளியாகத்தான் இயங்கி வந்தது.

ஆனால் தற்போது ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசின் விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. அர்ப்பணிப்போடு தங்கள் பணிகளைச் செய்து வரும் இந்தப் பள்ளியின் ஆசிரியர்களால், தேசிய அளவில் நடைபெறும் கல்வி, சமுதாய மாற்றத்துக்கான செயல்திட்ட போட்டியில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக விருதுகளை பெற்றுள்ளது. தமிழக அரசின் 2015 – 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருதையும் வென்றுள்ளது இந்தப் பள்ளி.

இங்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ஆனந்த், பள்ளியின் உட்கட்டமைப்பை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றியுள்ளார். தனது சொந்தப் பணம் 59 ஆயிரம் ரூபாயை பங்களிப்பாகக் கொடுத்து பள்ளியின் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளார் ஆனந்த்.

வெளிநாட்டில் வசிக்கும் தனது நண்பர்கள் மூலமாக 12 லட்சரூபாய் வரை பெற்று, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், டைல்ஸ் பதிக்கப்பட்ட கழிவறைகள் என பள்ளியை மேம்படுத்தி வருகிறார்.

பள்ளி வளாகத்தோடு நின்றுவிடாமல், விவசாயிகள் தற்கொலைகளை தடுக்கும் வண்ணம் மாணவர்களைக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நாடகங்களையும் நடத்தியுள்ளனர் பள்ளி ஆசிரியர்கள். பள்ளியில் பயிலும் மாணவர்களும் தமிழ், ஆங்கிலம் என மொழியறிவில் சிறந்து விளங்குகின்றனர்.

இதுபோன்ற பள்ளிகளை முன்னுதாரனமாகக் கொண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் செயல்படுமேயானால், எப்படிப்பட்ட கடினமான தேர்வுகளையும் சந்திக்கும் மனோதிடம் நம் மாணவர்களுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை .