​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒடிசாவில் நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Published : May 06, 2019 6:59 PM

ஒடிசாவில் நீட் தேர்வு தேதி அறிவிப்பு

May 06, 2019 6:59 PM

ஒடிசா மாநிலத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, மே 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மே 5ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெற்ற நிலையில், ஃபானி புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, மே மாதம் 20ஆம் தேதி நடைபெறும் எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட தேர்வு எழுதவுள்ளோரின் பட்டியலானது விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.