​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

Published : May 05, 2019 4:46 PM

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

May 05, 2019 4:46 PM

ஒடிசாவில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனர்.

ஃபானி புயலின் கோர தாண்டவத்தால் ஒடிசா மாநிலம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. புயல் பாதித்த பகுதியில் ராணுவத்தினர், கடற்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஃபானி புயலில் புனித நகரமான பூரி கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. அந்த பகுதியில், இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர்களில் இருந்து உணவுகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு விநியோகித்தனர்.