​​ பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக இந்திய விமானப்படை அதிகாரி கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக இந்திய விமானப்படை அதிகாரி கைது

Published : Feb 09, 2018 10:54 AM

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக இந்திய விமானப்படை அதிகாரி கைது

Feb 09, 2018 10:54 AM

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகவும், ரகசிய ஆவணங்களை செல்ஃபோன் மூலம் படம்பிடித்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாகவும் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் குரூப் கேப்டனாக பணியாற்றியவர் 51 வயதாகும் அருண் மர்வாஹா. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவரை தொடர்பு கொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் இருவருடன், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இவர் கிளுகிளுப்பான சாட்டிங்குகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல முக்கியத் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு சாட்டிங் வளர்ந்தது.

இதனை கண்டுபிடித்து, ரகசிய விசாரணை நடத்திய மூத்த அதிகாரி ஒருவர், அருண் மர்வாஹா குறித்து காவல் துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், செல்ஃபோன்களுக்கு அனுமதியில்லாத விமானப் படை தலைமையகத்துக்குள் செல்ஃபோனை மறைத்து எடுத்து வந்த மர்வாஹா விமானப்படை உளவுப் பிரிவிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். பின்னர் டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் விமானப்படையின் ரகசிய ஆவணங்களை செல்ஃபோன் மூலம் படம் எடுத்ததையும் அதனை வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் சாட்டுகள் மூலம் இரண்டு பெண்களுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அருண் மர்வாஹாவை கைது செய்த டெல்லி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விசாரணையில் மர்வாஹாவை தொடர்பு கொண்ட பெண்கள் இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு பார்ப்பவர்கள் என தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.