​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு

Published : May 03, 2019 5:49 PM

கேரள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு

May 03, 2019 5:49 PM

கேரளா மாநிலத்தில் இயங்கும் 150 இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 10 தொழில்முறை கல்லூரிகள், 18 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 12 உயர்நிலைப்பள்ளிகள், மற்றும் 36 சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட 150 கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு காரணமாக வளாகத்திற்குள் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், ‘முஸ்லிம் கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்கள் யாரும் எவ்வித முகத்திரைகளையும் வளாகத்திற்குள் அணிய கூடாது, இது புதிய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.