​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த மாம்பழங்கள் பறிமுதல்

Published : May 03, 2019 5:33 PM

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த மாம்பழங்கள் பறிமுதல்

May 03, 2019 5:33 PM

பழனியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த மாம்பழங்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரச் சாலையில் உள்ள பழக் கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கார்பைட் கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து ஒரு டன் அளவிலான மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், துப்புரவு ஊழியர்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தி குப்பையில் வீசினர்.