​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் முறையீடு

Published : May 03, 2019 11:44 AM

3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் முறையீடு

May 03, 2019 11:44 AM

அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்ய தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு திங்கட் கிழமை விசாரணைக்கு வருகிறது. 

எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சபாநாயகர் தனபால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மூன்று எம்.எல்.ஏ.க்களும் ஒருவாரத்துக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார் இதையடுத்து சபாநாயகருக்கு எதிராகா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமரில் முன்வைக்கப்பட்ட முறையீட்டில் 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க கோரப்பட்டது.

இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

தாங்கள் அ.தி.மு.க.வில் தான் இருப்பதாகவும், டி.டி.வி தினகரன் அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்த பின்னர் தாங்கள் அந்த கட்சியில் இல்லை என்றும் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச அழைத்தால் சந்தித்து பேச தயார் என்று ரத்தினசபாபதி தெரிவித்தார். சபநாயகர் அனுப்பியுள்ள நோட்டீசில் தினகரனுடன் தாங்கள் நெருக்கமாக இருந்தது தொடர்பான நாளிதழ் செய்திகள் உட்பட 185 பக்கங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.