அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கமல்ஹாசன் பதில்
Published : May 03, 2019 10:44 AM
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கமல்ஹாசன் பதில்
May 03, 2019 10:44 AM
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது, அவர்கள் இடையேயான பூசல் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது பற்றி கேள்வி எழுப்பிய போது, கொண்டு வரலாம் எனக் கூறிய அவர், பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பதில் அளித்தார்.
இதை அடுத்து தூத்துக்குடியில் பேசிய அவர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் தனிப்பட்ட விசயங்களை சாடுவதும் தங்கள் நோக்கம் அல்ல என்றார்.