​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்திச் சென்ற நபர்கள்

Published : May 03, 2019 10:41 AM

கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்திச் சென்ற நபர்கள்

May 03, 2019 10:41 AM

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காரில் தூங்கிக் கொண்டிருந்தவரை கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்தி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூரை சேர்ந்த கட்டுமான தொழில் செய்துவரும் பிரபாகரன் என்பவர், மேல்மருவத்தூர் அருகேயுள்ள தனது மாமனார் வீட்டிற்கு காரில் சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கன்னிகாபுரம் பகுதியில் தனது காரை ஒரு டீக்கடை ஓரம் நிறுத்திவிட்டு காரிலேயே படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த 3 நபர்கள் பிரபாகரனை கத்தியை காட்டி மிரட்டி காரில் இருந்து இறங்குமாறு கூறினர். காரில் இருந்து இறங்கிய பிரபாகரனை கீழே தள்ளிவிட்டு காரை கடத்தி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை கடத்தி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.