​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு பாதிக்கச் செய்த ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

Published : May 01, 2019 4:45 PM

மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு பாதிக்கச் செய்த ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

May 01, 2019 4:45 PM

சென்னை மெட்ரோ ரயில் சேவையை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் சதி செய்ததாக கூறி ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே திங்கட் கிழமை மாலை மெட்ரோ சேவையை முற்றிலும் முடக்கும் வகையில், ஊழியர்கள் சிலர் தானியங்கி சிக்னல் அமைப்பில் கோளாறு ஏற்படுத்தியதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.

இந்த பழுது நேற்று நண்பகள் 1.30 அளவில் சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய மெட்ரோ நிர்வாகம், சிக்னலில் கோளாறு ஏற்படுத்தியதாக கூறி 3 ஊழியர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மனோகரன், பிரேம்குமார் மற்றும் துணை போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சிந்தியா ஆகிய 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மெட்ரோ ரயில் சேவையையே ஸ்தம்பிச் செய்யும் சதித்திட்டத்துடன் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.