​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தினப் பேரணி...

Published : May 01, 2019 10:08 AM

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தினப் பேரணி...

May 01, 2019 10:08 AM

தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மேதினப் பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர். 

தூத்துக்குடி அண்ணா நகரில் தொடங்கிய மே தினப் பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று சிதம்பர நகர் மைதானத்தில் நிறைவடைந்தது. முக ஸ்டாலின் முன்னே செல்ல ஏராளமான திமுக தொண்டர்கள் அவரை பின் தொடர்ந்தனர்.

சிதம்பர நகர் மைதானத்தில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தி.மு.க. தான் தொழிலாளர்களின் காவலாளியாக செயல்பட்டு வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமையை நசுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். தொழிலாளர் தோழர்களுக்கும், விவசாயிகளுக்கும் 23-ஆம் தேதி பிறகு விடிவுகாலம் பிறக்கும் என்றும் அவர் கூறினார்.