​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம்

Published : May 01, 2019 9:30 AM

நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம்

May 01, 2019 9:30 AM

நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்:

தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 256 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 99 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 145 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாளை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

எடப்பாடி பழனிசாமி:

நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் இன்று வேனில் பிரச்சாரம் செய்கிறார். ஜல்லிப்பட்டி, செஞ்சேரி மலை, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் இன்று வாக்கு சேகரிக்கிறார்.

மு.க. ஸ்டாலின்:

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி, கீழதட்டபாறை, மேலதட்டபாறை பகுதிகளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வீடாக வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவரிடம் இந்த பகுதிகளில் சாலை, குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் கல்விகடன், விவசாய கடன் அனைத்து ரத்து செய்யபடும் என்றும் தெரிவித்தார்.

பொங்கலூர் பழனிச்சாமி:

சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி பீடம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

செந்தில்பாலாஜி:

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.

 செந்தில் நாதன்:

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் மலைக்கோவிலூர், சீத்தப்பட்டி காலனி, லிங்கத்துப்பாறை போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.