​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யார் மீது பாலியல் புகார் என்று பெயர் குறிப்பிடாமல் புகார் அளித்த வழக்கறிஞர் கைது

Published : May 01, 2019 9:23 AM

யார் மீது பாலியல் புகார் என்று பெயர் குறிப்பிடாமல் புகார் அளித்த வழக்கறிஞர் கைது

May 01, 2019 9:23 AM

பெரம்பலூரில் ஆளும் கட்சி பிரமுகர் மீது பாலியல் புகார் அளித்து அவதூறு பரப்பியதாக நாம்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

பெரம்பலூரில் ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் அரசுப் பணி வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் அருள் என்பவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த ஆளும் கட்சி பிரமுகர் யார் என்று பெயரை தெரிவிக்க மறுத்த அருள், பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் பதிவு என்று இரு ஆடியோக்களையும் வெளியிட்டார். சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் பெண்களை சீரழித்தவர்களின் பெயர்களை தெரிவிக்க மறுத்த அவர், சிபிஐ விசாரணை வைத்தால் பெயர்களை தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த நிலையில், தங்கள் கட்சிக்கு களங்கம் கற்பிக்கும்வகையில் வழக்கறிஞர் அருள் அவதூறு பரப்புவதாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கறிஞர் அருள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அருளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் செய்தியாளர்களிடம் கடும் கெடுபிடியாக நடந்து கொண்டனர். இதற்கிடையே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக பெரம்பலூர் காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.