​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமமுக மீது அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் புகார்

Published : Apr 30, 2019 1:26 PM

அமமுக மீது அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் புகார்

Apr 30, 2019 1:26 PM

அதிமுக கொடி நிறத்தையும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தையும் அமமுகவினனர் பயன்படுத்த தடை விதிக்க கோரி அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

டெல்லியில் இன்று தேர்தல் ஆணையத்திடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் மற்றும் அதிமுக கட்சி கொடியின் நிறம் கொண்ட வேஷ்டியை தொடர்ச்சியாக அமமுகவினர் பயன்படுத்திவருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.