பாஜக சார்பில் குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
இன்று காலை அவர் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார்.
நேற்று பிரதமர் மோடியை டெல்லியில் அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சன்னி தியோல் மிகவும் பணிவுடையவர் என்றும், நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். குருதாஸ்புர் தொகுதியில் வெற்றி பெறுவார் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
இதே தொகுதியில் நான்கு முறை வெற்றிபெற்ற வினோத் கன்னாவின் நினைவிடத்திற்கு சென்று சன்னிதியோல் மரியாதை செலுத்தினார்.