​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்காக கட்டப்பட்டுள்ள மைதானம் திறப்பு

Published : Apr 28, 2019 3:33 PM

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்காக கட்டப்பட்டுள்ள மைதானம் திறப்பு

Apr 28, 2019 3:33 PM

டோக்கியோவில், 2020 ஒலிம்பிக் போட்டி மற்றும் பாரலிம்பிக் போட்டிகளுக்காக கட்டப்பட்டுள்ள புதிய வில்வித்தை மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் வருகிற 2020 நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்காக தனித்தனியே 8 மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதலாவதாக யுமெனோஷிமா பூங்காவில்(Yumenoshima Park) அமைக்கப்பட்டுள்ள வில்வித்தை மைதானத்தை இளவரசி சுகுகோ(Tsuguko) திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து இருமுறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹிரோஷி யமமோட்டோ மற்றும் பிற வில்வித்தை வீரர்கள் அம்புகளை எய்து, பயிற்சி மேற்கொண்டனர்.