​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தே.ஜ கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அமித் ஷா ஆலோசனை

Published : Apr 26, 2019 10:35 AM

தே.ஜ கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அமித் ஷா ஆலோசனை

Apr 26, 2019 10:35 AM

அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன், பாஜக தலைவர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

வாரணாசியில் இன்று காலை, 8 மணியளவில், அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன், பாஜக தலைவர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

சிற்றுண்டியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக சார்பில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அக்கட்சியின் எம்.பி.தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவர்கள் தவிர, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே, சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்சிங் பாதல் உள்ளிட்டோருடனும், அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் உடனிருந்தனர்.