​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக சார்பில் சன்னி தியோல் போட்டி?

Published : Apr 21, 2019 9:25 AM

அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக சார்பில் சன்னி தியோல் போட்டி?

Apr 21, 2019 9:25 AM

நடிகர் தர்மேந்திராவின் மகனும், நடிகருமான சன்னி தியோல் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ள நிலையில், அமிர்தசரஸ் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

புனே விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு முன்கூட்டியே திட்டமிட்டப்பட்டது என மாவட்ட பாஜக தலைவர் தெரிவித்தார். விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் அமித் ஷாவை சந்திக்க சன்னி தியோல் அழைக்கப்பட்டதாகவும், இருவரும் சில நிமிடங்கள் பேசியதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.