​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாஞ்சில் சம்பத் வாகனம் மீது தாக்குதல்

Published : Apr 16, 2019 6:55 PM

நாஞ்சில் சம்பத் வாகனம் மீது தாக்குதல்

Apr 16, 2019 6:55 PM

கரூர் வெங்கமேட்டில் திமுக, அதிமுகவினர் மோதிக் கொண்டதில் இருவரது மண்டை உடைந்ததுடன், திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கரூர் வெங்கமேட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது அங்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

பிரச்சாரத்தை முடித்து விட்டு அவர்கள் புறப்பட்டதும், அதிமுக சார்பில் அதே இடத்தில் இறுதிகட்ட பிரச்சாரம் தொடங்கியது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வேட்பாளர் தம்பிதுரை ஆகியோர் வாக்கு சேகரிப்பதற்காக வந்தனர்.

இதை ஒட்டி, அதிமுக தொண்டர்களும் குவியத் தொடங்கினர். அப்போது அதிமுக, திமுகவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைக்கலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் இருவரும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

அந்த சமயத்தில், பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நாஞ்சில் சம்பத்துக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கட்சித் தொண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

முன்னதாக பிரச்சாரத்தின் போது பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கரூரில் தேர்தலை நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், தம்பிதுரையும் சதி செய்வதாக குற்றம்சாட்டினார். தேர்தலை நிறுத்தப் போவதாக ஆட்சியரே கூறியதாகவும் ஜோதிமணி புகார் கூறினார்.