​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
IPL கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி...

Published : Apr 11, 2018 11:45 AM

IPL கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி...

Apr 11, 2018 11:45 AM

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றிப்பெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசல் 36 பந்துகளை எதிர்கொண்டு, 11 சிக்சர்களுடன் 88 ரன்களைக் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது.

கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். வாட்சன் 42 ரன்களிலும், ராயுடு 39 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த ரய்னா மற்றும் கேப்டன் தோனி சொற்ப ரன்களில் வெளியேறியபோதும், பில்லிங்ஸ் 53 ரன்களைக் குவித்தார்

கடைசி ஓவரில் வெற்றிக்கு17 ரன்கள் தேவைப்பட்ட போது, பிராவோ- ஜடேஜா ஜோடி, சிக்சர்கள் விளாசி வெற்றிபெறச் செய்தனர். இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ், 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை வீரர்கள் விறுவிறுப்பாகவும், அசத்தலாகவும் விளையாடியதாக ஆட்டத்தைக் காணவந்த  ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.