​​ மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி ஆந்திராவில் முழு அடைப்புப் போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி ஆந்திராவில் முழு அடைப்புப் போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி ஆந்திராவில் முழு அடைப்புப் போராட்டம்

Feb 08, 2018 3:44 PM

ஆந்திர மாநிலத்துக்கு மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி அம்மாநிலம் முழுவதும் இடதுசாரிக் கட்சியினர் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி, கூடுதல் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி இடதுசாரிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பதியில் ஆந்திர அரசு பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலப் பேருந்துகளும் ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படவில்லை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காகத் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.